இந்தோனேசியா: வெள்ளத்திற்கு 700 பேர் பலியான நிலையில் மீண்டும் தாக்கிய நிலநடுக்கம்
பாலி, இந்தோனேசியாவில் கனமழை, சூறாவளி மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 700 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தும், காணாமல் போயும் உள்ளனர். வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய 3 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், வடக்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று அதிகாலை 2.20 மணியளவில் நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே புயல், வெள்ளத்தில் சிக்கி மக்கள் பலியாகி, நிவாரண பொருட்கள் கிடைக்க முடியாமல் திணறி வரும் சூழலில், நிலநடுக்க பாதிப்பும் அவர்களை துயரில் தள்ளியுள்ளது. 27 கோடி பேருக்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட இந்தோனேசியாவில் நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமி பாதிப்புகள் அடிக்கடி ஏற்படுவது உண்டு. வடக்கு சுமத்ரா மாகாணத்தில் கடந்த நவம்பர் 26-ந்தேதி ரிக்டர் அளவுகோலில் 4.4 அளலிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த அக்டோபரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், நடப்பு ஆண்டின் இறுதியில் மலாக்கா ஜலசந்தியில் ஏற்பட்ட சென்யார் சூறாவளி புயலானது, அந்நாட்டை கடுமையாக பாதித்து உள்ளது.




கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
