நடிகர் அஜித்தின் எளிமை கண்டு வியந்த திரைப்பட விமர்சகர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார். அண்மையில் அஜித்குமார் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் நேர்காணலின்போது பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். இந்த நேர்காணல் இணையத்தில் வைரலானது. அந்த பெட்டியில் அஜித் மனம் விட்டு பல விஷயங்களை பேசினார். விஜயின் அரசியல் பிரவேசம், ஒரு நடிகனாக தான் இழந்த விஷயம், ரசிகர்களின் மனப்பான்மை என பல விஷயங்களை பேசினார். குறிப்பாக ரசிகர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அதில் பேசியிருந்தார். மேலும், மோட்டார் ரேஸில் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என்றெல்லாம் கூறினார். இந்நிலையில், அஜித்தை நேர்காணல் செய்த அனுபமா சோப்ரா அந்த நேர்காணல் குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அஜித்தின் நேர்காணல் குறித்து பேசிய அனுபமா சோப்ரா, “துபாயில் அஜித்திடம் நேர்காணல் எடுத்தேன். அவர் அங்கு தனியாக வந்தார். ஆனால், என்னுடன் ஒப்பனையாளர் இருந்தார். அஜித் மேக்கப் செய்து கொள்ளவே இல்லை. அவரது செயல் எனக்கு அது சங்கடமாக இருந்தது. மேலும் மற்றவர்களுக்கு அவர் அறை கதவை திறந்துவிடுகிறார். அவரின் எளிமையை கண்டு நான் கூச்சப்பட்டேன்” என்று தெரிவித்தார்.A post shared by CAFC ⭐️ (@coimbatoreajithfanscommunityy)




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
