30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் அடூர் - மம்முட்டி கூட்டணி
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் மம்முட்டி, தற்போது பேட்ரியாட் எனும் அரசியல் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் மம்முட்டியை வைத்து அடுத்த படம் எடுக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார். மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய 'அனந்தரம்', 'மதிலுகள்', 'விதேயன்' ஆகிய திரைப்படங்களில் நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்முட்டி கூட்டணி 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இதனை அடூர் கோபாலகிருஷ்ணன் உறுதிப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக மலையாள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் அடூர் கோபாலகிருஷ்ணன், “என்னுடைய அடுத்தப் படத்தில் மம்முட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கான நபர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கதை எழுதும்போது முதன்மை கதாபாத்திரத்திற்கு என் மனதில் மம்முட்டி முகமே தோன்றியது. அந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியானத் தேர்வு என்று நான் உணர்ந்தேன். என்னுடைய திரைப்படத்தில் நான்காவது முறையாக நடிக்கிறார்.நான் இதுவரை மற்ற நடிகர்களுடன் இவ்வளவு முறை பணியாற்றியதில்லை” என்று கூறியிருக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்முட்டி கூட்டணி திரைப்படங்களுக்கு கேரளத்தில் நல்ல வரவேற்பு இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
