விநாயகனுக்கு நேசிக்கும் குணம் இருக்கிறது - மம்முட்டி
மூத்த நடிகரான மம்முட்டி ரோர்சார்ச், புழு, பிரம்மயுகம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் வில்லனாக நடித்துள்ள புதிய படம் ‘களம்காவல்’. நடிகர் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. ‘களம்காவல்’ படத்தை நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் மம்முட்டி இணைந்து தயாரித்துள்ளனர். காவல்துறைக்குச் சவால்விடும் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருக்கிறார்.‘களம்காவல்’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் வருகிற 5ம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்முட்டி படம் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பின்பு விநாயகன் மேடைக்கு அழைக்கப்பட்ட போது, மரியாதை கலந்த தயக்கத்துடனே மேடைக்கு வந்த அவர் மம்முட்டியிடம் ஆசி பெற்றார். பின்பு பேசிய அவர், “எனக்கு எப்படி பேசுவது என்று தெரியாது. அது உங்களுக்கும் தெரியும்” என்று பணிவுடன் கூறினார். உடனே குறுக்கிட்ட மம்முட்டி, “உங்களுக்கு எப்படி பேசுவது என்று தான் தெரியாது, ஆனால் எப்படி சிறப்பாக நடிக்க வேண்டும் என்று தெரியும்” என்றார். தொடர்ந்து விநாயகன் குறித்து பேசிய அவர், “வகுப்பில் ஒரு பையன் குறும்பு செய்தாலும் அவனை எல்லோரும் நேசிப்போம். அது போலத்தான் விநாயகனும். அவர் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அவரிடம் அனைவரும் நேசிக்கும் குணமும் இருக்கிறது” என்றார். A post shared by AR8 (@ar8_mp4_)




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
