"இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக.."- விரைவில் திரைக்கு வரும் 'அனலி'
மூன்றாம் உலகப்போர் பற்றிய சிந்தனையில் ஒரு புதிய கதை தயாராகி இருக்கிறது. சிந்தியா புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் கதையின் நாயகியாக சிந்தியா லூர்டே நடித்துள்ளார். இந்த படத்துக்கு ‘அனலி' என்று பெயரிட்டுள்ளனர். தினேஷ் தீனா இயக்கியுள்ள இந்த படத்தில் டைரக்டர் வாசுவின் மகன் சக்தி வாசு வில்லனாக நடித்துள்ளார். முன்னணி நடிகர்-நடிகைகள் நடித்துள்ள இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்' போஸ்டரை டைரக்டர்கள் வெங்கட்பிரபு, கணேஷ் கே.பாபு ஆகியோர் வெளியிட்டனர். தினேஷ் தீனா கூறும்போது, ‘‘இது ஒரே இரவில் நடக்கும் கதை. மூன்றாம் உலகப்போரையும், மிகப்பெரிய கடத்தல் மன்னன்களாக திகழ்ந்தோரை பற்றியும் படத்தில் சொல்லியுள்ளோம். இதில் சிந்தியா லூர்டேவின் நடிப்பு பேசப்படும். பெரிய ஆக்ஷன் கதாநாயகியாக அவர் வருவார். இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக பத்தாயிரம் கன்டெய்னர்கள் கொண்ட யார்டில் மிக பிரமாண்டமான செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. படம் விரைவில் திரைக்கு வருகிறது'' என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
