அனுபமாவின் “லாக்டவுன்” படத்திற்கு 'யு/ஏ' தணிக்கை சான்றிதழ்
லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள‘லாக் டவுன்’ திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இத்திரைப்படம் வருகிற 5ம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கிடையில், ‘லாக் டவுன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினை அதன்பிறகு கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு என சுழலும் கதையில் அப்பெண்ணிற்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே இந்த டிரெய்லர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் இன்னும் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தணிக்கை வாரியம் லாக்டவுன் படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. #Lockdown ⚡️ is all set to hit the screens. See U/And your family in theatres on Dec 5. ️#LockdownInCinemasDec5@anupamahere #ARJeeva @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran #PriyaaaVenkat @shakthi_dop @NRRaghunanthan @sidvipin @EditorSabu @sherif_choreo #SriGirish… pic.twitter.com/NoQSg5JqOF




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
