பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நலமாக உள்ளார் - சகோதரி தகவல்
இஸ்லாமாபாத்,பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி தலைவராக இருந்தவர் இம்ரான் கான். பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் என்ற பெயரில் கட்சி தொடங்கி அந்த நாட்டின் பிரதமராக பதவியேற்றார். பதவியில் இருந்தபோது வெளிநாட்டு தலைவர்கள் கொடுத்த பரிசு பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக ‘தோஷ்கானா’ வழங்கில் கைதானார். பதவி பறிக்கப்பட்டு பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் 2023-ம் ஆண்டு அடைக்கப்பட்டார். தனியறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை சந்திக்க உறவினர்களுக்கு கடந்த ஓராண்டாக அனுமதியளிக்கப்படவில்லை. இதனால் அவர் சித்ரவதை செய்யப்பட்டு சிறையிலேயே இறந்துவிட்டதாக யூகங்கள் கிளம்பின. இந்தநிலையில் நேற்று இம்ரான் கான் சகோதரி உஸ்மாவுக்கு இம்ரான் கானை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. சிறையில் அவரை சந்தித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர், “இம்ரான் கான் நலமுடன் உள்ளார். ஆனால் தனியறையில் அடைக்கப்பட்டுள்ளதால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். சிறை வளாகத்தில் நடமாடவும் அதிக நேரம் தரப்படுவதில்லை” என்றார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
