மாடல் அழகியை கொன்று சூட்கேசில் அடைத்த முன்னாள் காதலன் - ஆஸ்திரியாவில் பரபரப்பு
வியன்னா, ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி ஸ்டெபானி பைபர். மாடல் அழகியான இவர் அழகுக்கலை நிபுணராகவும் இருந்தார். எனவே சமூகவலைதளங்களில் அவரை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந்தேதி திடீரென அவர் மாயமானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவரது முன்னாள் காதலன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது காதலை கைவிட்ட ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார். மேலும் ஸ்லோவேனியா எல்லை அருகே சூட்கேசில் வைத்து அவரை புதைத்ததாக கூறினார். இதனையடுத்து அந்த சூட்கேசை தோண்டி எடுத்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கு உதவியதாக வாலிபரின் தந்தை மற்றும் சகோதரனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
