ரிஷப் ஷெட்டிபோல் நடிப்பு....கிளம்பிய சர்ச்சை - மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்
சென்னை,சமீபத்தில் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் ரிஷப் ஷெட்டி, பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மேடையில் தோன்றி பேசிய நடிகர் ரன்வீர் சிங், காந்தாரா திரைப்படத்தில் வரும் ‘தெய்வா' கடவுளை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும், ரிஷப் ஷெட்டிபோல் முக பாவனைகளை செய்து காட்டியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதற்கு ரன்வீர் சிங் மன்னிப்புக்கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,"ரிஷப்பின் அற்புதமான நடிப்பை முன்னிலைப்படுத்துவதே எனது நோக்கம். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நமது நாட்டின் ஒவ்வொரு கலாசாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையையும் நான் எப்போதும் மதிக்கிறேன். யாருடைய மனதையும் நான் புண்படுத்தியிருந்தால், மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
