மீண்டும் இணைந்த ’பேபி’பட கூட்டணி - டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை,கடந்த 2023- ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று பேபி. விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் வைஷ்ணவி சைதன்யா கதாநாயகியாக நடித்திருந்தார். எஸ்கேஎன் தயாரிப்பில் சாய் ராஜேஷ் இயக்கிய இப்படம் 5 பிலிம்பேர் விருதுகளை அள்ளியது. தற்போது இவர்கள் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளார்கள். துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர், பாலகிருஷ்ணாவின் டாகு மகாராஜ் உள்ளிட்ட படங்களை தயாரித்த சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரிக்கிறது. #90ஸ் என்ற வெப் தொடரை இயக்கி பிரபலமான ஆதித்யா ஹாசன் இயக்கும் இப்படத்திற்கு அஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ’எபிக் ( பர்ஸ்ட் செமஸ்டர்)’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.'பேபி' படத்தின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்த ஆனந்த் தேவரகொண்டா-வைஷ்ணவி சைதன்யா மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
