அடுத்த படத்தில் 6 ஹீரோயின்களா? - ரவி தேஜா விளக்கம்
சென்னை,ரவி தேஜாவின் அடுத்த படத்தில் ஆறு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரபரப்பாக பரவி வருகிறது. இது இணையத்தில் பலவிதமான டிரோல்களை தூண்டி இருக்கிறது. இந்நிலையில், ரவி தேஜாவின் குழு இந்த செய்திகளை ஆதாரமற்றது என்று உடனடியாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், "ரவி தேஜாவின் அடுத்த படத்தில் 6 ஹீரோயின்கள் நடிப்பதாக பரவும் செய்தி முற்றிலும் போலியானது. இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பரப்ப வேண்டாம் என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று படக்குழு தெரிவித்துள்ளது. ரவி தேஜா தற்போது கிஷோர் திருமலா இயக்கும் " பாரத மகாசாயுலகு விக்னியாப்தி " படத்தில் நடித்து வருகிறார். இது அடுத்த ஆண்டு பொங்கலுக்க ரிலீஸாக தாயாராகி வருகிறது. மேலும், இயக்குனர் சிவ நிர்வாணாவின் புதிய படத்தின் படப்பிடிப்பையும் அவர் தொடங்கியுள்ளார், ராஜமுந்திரி அருகே படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீப காலமாக அவருக்கு வெற்றிகள் குறைவாக இருந்தாலும், பல சுவாரஸ்யமான படங்களில் கையெழுத்திட்டு வருகிறார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
