ஆஷஸ் 2-வது டெஸ்ட்: கம்மின்ஸ், ஹேசில்வுட் வரிசையில் மற்றொரு ஆஸி. முன்னணி வீரரும் விலகல்
பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி காபா மைதானத்தில் வருகிற 4-ம் தேதி தொடங்குகிறது.காயம் காரணமாக இந்த போட்டியில் முன்னணி வீரர்களான கேப்டன் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் இடம்பெறவில்லை. இவர்கள் முதல் போட்டியிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர் ஆன உஸ்மான் கவாஜா இந்த 2-வது போட்டியிலிருந்து விலகியுள்ளார். உஸ்மான் கவாஜா முதுகு வலியால் அவதிப்படுகிறார். இதனால் பிரிஸ்பேனில் நாளை மறுதினம் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் இருந்து விலகியுள்ளார். கம்மின்ஸ், ஹேசில்வுட் வரிசையில் கவாஜாவும் விலகி இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு பலத்த பின்னடைவாக அமைந்துள்ளது. இவருக்கு மாற்றுவீரர் அறிவிக்கப்படவில்லை. இதனால் டிராவிஸ் ஹெட் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஷ்சேன், நாதன் லயன், மைக்கேல் நெசர், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
