சூர்யவன்ஷி சதம் வீண்... பீகார் அணியை வீழ்த்தி மராட்டியம் வெற்றி
கொல்கத்தா, சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பீகார் - மராட்டியம் (குரூப் பி) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மராட்டிய அணியின் கேப்டன் பிரித்வி ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பீகார் அணி தொடக்க ஆட்டக்காரர் ஆன வைபவ் சூர்யவன்ஷியின் அபார சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் அடித்தது. சூர்யவன்ஷி 108 ரன்களுடனும், ஆயுஷ் லோஹருகா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனையடுத்து 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மராட்டிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரித்வி ஷா அதிரடியாக ஆடி அணிக்கு வலு சேர்த்தார். வெறும் 30 பந்துகளில் 66 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் நிரஜ் ஜோஷி 30 ரன்கள், ரஞ்சித் நிகாம் 27 ரன்கள், நிகில் நாய்க் 22 ரன்கள் ஆகியோரின் கணிசமான பங்களிப்பால் மராட்டிய அணி வெற்றி பெற்றது. 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் அடித்த மராட்டிய அணி 3 விக்கெட்டுள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரித்வி ஷா ஆட்ட நாயகன் விருது வென்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
