ஆஷஸ் 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு
பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி காபா மைதானத்தில் வருகிற 4-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக இந்த போட்டியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் வில் ஜாக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி முதல் போட்டியில் இடம்பெற்றிருந்த வீரர்களே தொடர்கின்றனர். இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்: 1. ஜாக் கிராலி 2. பென் டக்கெட் 3. ஓலி போப் 4. ஜோ ரூட் 5. ஹாரி புரூக் 6. பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்) 7. ஜேமி ஸ்மித் 8. வில் ஜாக்ஸ் 9. கஸ் அட்கின்சன் 10. பிரைடன் கார்ஸ் 11. ஜோப்ரா ஆர்ச்சர்




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
