3-வது டி20: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வங்காளதேசம்
சட்டோகிராம், அயர்லாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது. இந்நிலையில் இந்த தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி வங்காளதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் 117 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்டிர்லிங் 38 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தன்சித் ஹசன் தமீம் - சைப் ஹசன் களமிறங்கினர். இவர்களில் சைப் ஹசன் 19 ரன்களிலும், அடுத்து வந்த லிட்டன் தாஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஹசன் தமீம் - பர்வேஸ் ஹொசைன் எமோன் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தனர். வெறும் 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 119 ரன்கள் அடித்த வங்காளதேசம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றி அசத்தியது. தன்சித் ஹசன் தமீம் 55 ரன்களுடனும், எமோன் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தன்சித் ஹசன் தமீம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மஹேதி ஹசன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
