எதிர்க்கட்சிகள் தொடர் அமளி; மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
புதுடெல்லி, ஆண்டு இறுதியில் நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதேநேரம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், டெல்லி கார் வெடிப்பு சம்பவம், வாக்கு திருட்டு குற்றச்சாட்டு, டெல்லி காற்று மாசு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் முடிவு செய்து இருந்தன. இதன்படி அவையின் முதல் நாளான நேற்று கடும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கோஷமிடத் தொடங்கினர். இடைவிடாது அமளியில் ஈடுபட்டாலும் கேள்வி நேரம் தொடர்ந்தது. எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் நேற்று முடங்கின. இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைகப்பட்டது. இதன்படி 2 மணிக்கு அவை கூடியதும், எஸ்.ஐ.ஆர் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் கடும் அமளிக்கு இடையே மணிப்பூர் ஜிஎஸ்டி வரி மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மசோதா இன்று காலை மக்களவையில் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
