ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது; கடற்படை தளபதி தகவல்
டெல்லி,ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. பின்னர், இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குப்பின் மோதல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், இந்திய கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளதாக அவர் கூறினார். இது தொடர்பாக தினேஷ் திரிபாதி கூறியதாவது, பாகிஸ்தான் கடற்படை அதன் துறைமுகங்களிலேயே நிற்குமாறு இந்திய கடற்படை வலிமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாகிஸ்தானுக்கு எதிரான மோதலை தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் கடற்படை தயார் நிலையிலேயே உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையின் போர் கப்பல்கள் பாகிஸ்தான் கடற்படையை அதன் துறைமுகங்கள் மற்றும் அதன் கடற்கரை பகுதிகளிலேயே நிறுத்தின. ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
