"மிகவும் இனிமையானவர்" - விக்ரமை புகழ்ந்த நானி
சென்னை,நடிகர் நானி, தற்போது பல படங்களில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனது வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை குறித்து பேசினார். அப்போது, நானி விக்ரமை ’இனிமையான நபர்’என்று புகழ்ந்தார். அவர் பேசுகையில், "சில மாதங்களுக்கு முன்பு, 'ஹாய், நானி சார் உங்களிடம் பேச விரும்புகிறேன்' என்று எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. தற்போது எண்கள் கசிந்து கொண்டிருப்பதால், அது தெரியாத நபராக இருக்கும் என்று நினைத்து நான் அதைப் புறக்கணித்தேன். பின்னர், அடுத்த நாளில், 'ஹாய் நானி, நான் விக்ரம். உங்களிடம் பேச விரும்புகிறேன், எப்போது பேசலாம்' என்று மற்றொரு மெசேஜ் வந்தது. அது அவர்தானா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் என் மேனேஜரிடம் கேட்டேன், அவர் ஆம் என்றார். உடனடியாக நான் அவரை அழைத்து பேசினேன். அவர் என்னிடம் 10-15 நிமிடங்கள் பேசினார். என் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். அவர் மிகவும் இனிமையான நபர்’ என்றார்.கடைசியாக ஹிட் 3 படத்தில் நடித்த நானி , அடுத்து தசரா பட புகழ் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமான தி பாரடைஸில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் மோகன் பாபு மற்றும் ராகவ் ஜுயல் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
