அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - வெனிசுலா சொல்கிறது
கராகஸ், வெனிகலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். மேலும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாக டிரம்ப் தெரிவித்து உள்ளார்.இதையடுத்து கடந்த செப்டம்பர் முதல் வெனி சுலா அருகே கரீபியன் பகுதியில் அமெரிக்கா கடற்படையை பெரும் அளவில் குவித்து வருகிறது. இதனால் வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் மழரோ வும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.இந்த நிலையில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்து உள்ளார். தலைநகர் கராகசில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற மதுரோ தனது ஆதரவாளர்கள் பேசியதாவது:நாங்கள் அமைதியை விரும்புகிறோம். இறையாண்மை. சமத்துவம், சுதந்திரம் கொண்ட அமைதியை விரும்புகிறோம். அடிமையின் அமைதியையோ, காலனித்துவ அமைதியையோ நாங்கள் விரும்பவில்லை. வெனிசுலா ஒருபோதும் வெளிநாட்டு அழுத்தம் அல்லது ஆதிக்கத்திற்கு அடிபணியாது. ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா முயற்சிக்கிறது. மோதலுக்கு தயாராகும்போது வெனிசுல வெளிப்புற கட்டளைகளுக்கு அடிபணியாது. இவ்வாறு அவர் கூறினார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
