வேலைக்கு செல்லாமல் பப்ஜி விளையாடியதை கண்டித்த மனைவியை கொன்ற இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்
போபால்,மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரஜத். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நேஹா (வயது 24) என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. இதனிடையே, ரஜத் செல்போனில் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாக இருந்துள்ளார். அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவாறு பப்ஜி விளையாடியுள்ளார். இதனால், நேஹாவுக்கும் ரஜத்திற்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வேலைக்கு செல்லுமாறு கணவனை நேஹா தொடர்ந்து வற்புத்து வந்துள்ளார். இந்நிலையில், வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து பப்ஜி விளையாடுவது தொடர்பாக கடந்த சனிக்கிழமை இரவு ரஜத்திற்கும் நேஹாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரஜத் தனது மனைவி நேஹாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டை விட்டு தப்பியோடியுள்ளார். நேஹா கொல்லப்பட்டது குறித்து ஞாயிற்றுக்கிழமை காலை கிராமத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைந்து சென்ற போலீசார் நேஹாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய ரஜத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
