வரதட்சணை கொடுமை: ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை
அமராவதி, ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தடிப்பல்லி பகுதியை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சின்னராமுடு. இவரது மகள் மதுரி சஹிதிபாய் (வயது 27). இதனிடையே, மதுரி சஹிதிபாய் நந்தியால் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞரை காதலித்து கடந்த மார்ச் மாதம் பதிவுத்திருமணம் செய்துகொண்டார். அதேவேளை, திருமணமான சில மாதங்களில் மதுரியிடம் வரதட்சணை கேட்டு ராஜேஷ் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் மதுரி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்நிலையில், கணவன் தொடர்ந்து வரதட்சணை கொடுமை செய்ததாலும், கணவன் தன்னை உண்மையாக காதலிக்கவில்லை என்றும், தன்னை மீண்டும் அழைத்து செல்ல வரவில்லை என்று மன வேதனையடைந்த மதுரி இன்று தனது பெற்றோர் வீட்டில் உள்ள கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மதுரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
