முதல்-மந்திரி பதவி விவகாரம்: டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு விருந்து
பெங்களூரு, கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி எழுந்த நிலையில் இறுதியில் சித்தராமையா முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். முதல்-மந்திரி பதவியை 2 பேரும் ஆளுக்கு 2½ ஆண்டுகள் வீதம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அப்போது ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி சித்தராமையா ஆட்சி அதிகாரத்தில் 2½ ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டதால் முதல்-மந்திரி பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திடீரென போர்க்கொடி தூக்கினார். இது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது. ஒரு வாரம் குழப்பம் நீடித்த நிலையில் காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி சித்தராமையா வீட்டில் டி.கே.சிவக்குமார் சிற்றுண்டி கூட்டத்தில் கலந்துகொண்டார். தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று 2 பேரும் விளக்கம் அளித்தனர். இதன்மூலம் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தனது வீட்டிற்கு சிற்றுண்டி விருந்துக்கு வருமாறு முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்திருந்தநிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, சித்தராமையா சதாசிவநகரில் உள்ள டி.கே.சிவக்குமாரின் வீட்டிற்கு வருகை தந்தார். அவரை சிவகுமார் மற்றும் அவரது சகோதரரும் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான டி.கே. சுரேஷ் வரவேற்றனர். இதுதொடர்பாக டி.கே.சிவக்குமார் தனது எக்ஸ் வலைதளத்தில், “காங்கிரஸ் தொலைநோக்குப் பார்வையின் கீழ் நல்லாட்சி மற்றும் நமது மாநிலத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக, இன்று எனது இல்லத்தில் முதல்-மந்திரிக்கு காலை உணவை அளித்தேன்” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு மிகவும் பிடித்தமான நாட்டு கோழி குழம்பு, ராகி உருண்டை உள்ளிட்டவை பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் காங்கிரஸ் மேலிட முடிவை இருவரும் ஏற்போம் என்று ஏற்கனவே சித்தராமையா, டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Hosted the Hon’ble CM for breakfast at my residence today as we reaffirm our commitment to good governance and the continued development of our state under the Congress vision. pic.twitter.com/qmBxr50S64




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
