பானி பூரிக்கு ஆசைப்பட்ட பெண்.. வாயை மூட முடியாமல் தவித்த பரிதாபம்
லக்னோ, உத்தரப் பிரதேச மாநிலம், ஔரையா மாவட்டத்தில் திபியாபூர் பகுதியைச் சேர்ந்தவர் இன்கலா தேவி (வயது 42) இவர் ஆசை ஆசையாக பானி பூரி சாப்பிடுவதற்காக வாயைத் திறந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது தாடை விலகியதாக கூறப்பட்டது. தாடை விலகியதால் கடும் அவதி அடைந்தார். இதனையடுத்து வாயை மூட முடியாமல் தவித்த தேவி உடனடியாக மருத்துவ உதவி நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.அவரது உறவினர்களின் அளித்த தகவலின்படி, அவர் பானி பூரி சாப்பிட வாயைத் திறந்தபோது, அவரது தாடை திடீரென விலகி அங்கேயே ஸ்தம்பித்துவிட்டது. முதலில் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்கள் மனோஜ் குமார் மற்றும் சத்ருகன் சிங் ஆகியோர் தாடையை மீண்டும் அதன் இடத்திற்குக் கொண்டு வர முயற்சித்தனர், ஆனால் வெற்றி பெறவில்லை. இதனையடுத்து, அவர் சிறப்புச் சிகிச்சைக்காகச் சிச்சோலி மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டார். மருத்துவர் சத்ருகன் சிங் கூறுகையில், அவர் அதிகமாக வாயைத் திறந்ததால் தாடை விலகி இருக்கலாம் என்றும், இது போன்ற நிலை சாப்பிடும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படலாம் என்று தெரிவித்தார். பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார் இன்கலா தேவி.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
