இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்: நிவாரண பணிகளை தீவிரப்படுத்திய ஐ.நா - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் ஏற்பட்டுள்ள புயல் வெள்ள பாதிப்புகளை சமாளிப்பதற்கான நிவாரண உதவிகளை ஐ.நா செயல்படுத்த தொடங்கியுள்ளது.டிட்வா புயல் காரணமாக இலங்கையின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பலர் தங்கள் உறவுகளையும், உடமைகளையும் இழந்து நிர்கதியாகியுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமைகளுக்கு நிவாரணம் வழங்க ஐக்கிய நாடுகள் சபை(ஐ.நா) அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பை செயல்படுத்த தொடங்கியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், நீர், கல்வி, பாதுகாப்பு, தங்குமிடம், மற்றும் ஆரம்பகால மீட்சி போன்ற முக்கிய நிவாரண தேவைகளை அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது.பாதிக்கப்பட்ட பகுதிகளை அணுகுவதில் உள்ள சவால்களுக்கு மத்தியிலும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF), வெள்ளம் மற்றும் உள்கட்டமைப்பு சேதம் காரணமாக மற்ற பகுதிகளிலிருந்து இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்த பதுளை மாவட்டத்தின் 25 பாதுகாப்பு மையங்களுக்கு அத்தியாவசியமான குடிநீரை விநியோகம் செய்துள்ளது.நிவாரண முயற்சிகள் தொடர்பாக உறுதியளித்து இருந்த ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்சே, தேசிய மீட்பு மற்றும் ஆரம்பகால மீட்சி முயற்சிகளுக்கு ஐ.நா. குழுக்கள் முழு ஆதரவு வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நட்பு நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
