தொடர் அமளி: எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் மக்களவை சபாநாயகர் பேச்சுவார்த்தை
டெல்லி,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளை, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி, டெல்லி கார் குண்டு வெடிப்பு சமப்வம், வாக்கு திருட்டு குற்றச்சாட்டு, டெல்லி காற்று மாசுபாடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும், இந்த பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2வது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் மக்களவையை சுமூகமாக நடத்த ஆதரவு அளிக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் சபா நாயகர் கோரிக்கை வைத்தார். அதேவேளை, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி குறித்து விவாதிக்க அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
