பாமக தலைவராக அன்புமணிக்கு அங்கீகாரம்: தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக ராமதாஸ் வழக்கு
புதுடெல்லி,பாமக தலைவராக அன்புமணி ராமதாசை அங்கீகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஐகோர்ட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. தங்களது தரப்பு அளித்த அசல் ஆவணங்களை ஆய்வு செய்யாமல் இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், பாமகவுக்கு தானே தலைவர் என்றும், தங்களுடைய தரப்புக்கு கட்சியின் சின்னமான 'மாம்பழம்' ஒதுக்க வேண்டும் என்றும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.ராமதாஸ் கடிதத்துக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், அன்புமணிதான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என அறிவித்தது. இந்த கடிதம் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை சட்டரீதியாக அணுகுவோம் என்று ராமதாஸ் கூறிய நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
