விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் திறப்பு
விசாகப்பட்டினம்,ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.இந்த கண்ணாடி நடைபாலம், விசாகப்பட்டினத்தில் கைலாசகிரி மலை உச்சியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்தில் 55 மீட்டர் நீளத்தில் கேன்டிலிவர் பாலமாக இது கட்டப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் மாநகர வளர்ச்சி ஆணையத்தால் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்ட இப்பாலத்தின் கண்ணாடிகள் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 40 மி.மீ. தடிமன் கொண்ட உயர்தர மூன்று அடுக்கு கண்ணாடி, 40 டன் வலுவூட்டப்பட்ட எஃகு இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் வீசும் புயல் மற்றும் சூறாவளி காற்றை தாங்கக் கூடியது.இப்பாலம் தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும் எனவும் 15 நிடங்களுக்கான கட்டணம் ரூ.300 எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
