ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: ஜெர்மனி, அர்ஜென்டினா அணிகள் கால்இறுதிக்கு தகுதி
14-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்சில் உள்ள சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த போட்டி தொடரில் மதுரையில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஜெர்மனி அணி 5-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை தோற்கடித்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது. ஜெர்மனி அணியில் ஜோனஸ் வோன் ஜெர்சும், பால் கிளான்டெர், லூகாஸ் கோசெல், கிறிஸ்டியன் பிரான் கோலடித்தனர் இதே பிரிவில் மாலையில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 9-1 என்ற கோல் கணக்கில் கனடாவை விரட்டியடித்தது. தென்ஆப்பிரிக்க அணியில் ஜெய்டன் புரூகெர் 4 கோல் போட்டு கலக்கினார். ‘ஏ’ பிரிவில் லீக் ஆட்டங்கள் முடிவில் ஜெர்மனி 9 புள்ளிகளுடன் (3 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடம் பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. தென்ஆப்பிரிக்க அணி 6 புள்ளிகளுடன் (2 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடம் பெற்று கால்இறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. அயர்லாந்து (ஒரு வெற்றி, 2 தோல்வி) 3-வது இடமும், கனடா (3 ஆட்டங்களிலும் தோல்வி) கடைசி இடமும் பெற்று கால்இறுதி வாய்ப்பை இழந்தன. சென்னையில் நடந்த ஒரு ஆட்டத்தில் தரவரிசையில் 12-வது இடம் வகிக்கும் நியூசிலாந்து, 17-வது இடத்தில் உள்ள ஜப்பானுடன் மோதியது. முடிவில் நியூசிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது. பலத்த மழை காரணமாக ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆட்டம் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.இதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் (சி பிரிவு) அர்ஜென்டினா 3-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வெளியேற்றியது. இந்த பிரிவில் அர்ஜென்டினா, நியூசிலாந்து தலா 7 புள்ளிகளுடன் (2 வெற்றி, ஒரு டிரா) சமநிலை வகித்த போதிலும் கோல் வித்தியாசம் அடிப்படையில் அர்ஜென்டினா கால்இறுதி வாய்ப்பை உறுதி செய்தது.Germany open the scoring at the FIH Hockey Women’s Junior World Cup City of Santiago 2025!! Germany score the first goal of the women’s Junior World Cup thanks to this cracking reverse hit by Annika Schönhoff! … pic.twitter.com/lWuIKGnqSw




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
