23 வயதுக்குட்பட்டோர் மாநில கிரிக்கெட்: தமிழக அணி சாம்பியன்
மும்பை, 23 வயதுக்குட்பட்டோருக்கான மாநில ‘ஏ’ கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்தது. இதில் பங்கேற்ற 31 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. இதில் ‘டி’ பிரிவில் இடம் பிடித்த தமிழக அணி 5 வெற்றி, 1 தோல்வியுடன் முதலிடத்தை பிடித்து ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது. கால்இறுதியில் ஆந்திராவையும், அரைஇறுதியில் பெங்காலையும் வீழ்த்திய தமிழக அணி இறுதி ஆட்டத்தில் உத்தரபிரதேசத்தை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த பூபதி வைஷ்ணகுமார் தலைமையிலான தமிழக அணி 49.3 ஓவர்களில் 297 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிஷ் (53 ரன்), முகமது அலி (57 ரன்), மனவ் பராக் (57 ரன்) அரைசதம் அடித்தனர். பின்னர் 298 ரன் இலக்கை நோக்கி ஆடிய உத்தரபிரதேச அணி 47.5 ஓவர்களில் 241 ரன்னில் அடங்கியது. அதிகபட்சமாக பிரசாந்த் வீர் 87 ரன்கள் எடுத்தார். முகமது அலி 5 விக்கெட் சாய்த்தார். இதன் மூலம் 56 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
