ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இந்திய பெண்கள் அணி வெற்றி
சான்டியாகோ, 11-வது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) சிலி நாட்டின் தலைநகர் சான்டியாகோவில் நேற்று தொடங்கியது. வருகிற 13-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி, 2-வது இடத்தை பிடிக்கும் சிறந்த இரு அணி என மொத்தம் 8 அணிகள் காலிறுதி சுற்றை எட்டும். இதில் இந்திய அணி ‘சி’ பிரிவில் அங்கம் வகிக்கிறது. ஜெர்மனி, நமிபியா, அயர்லாந்து அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நமிபியாவுடன் நேற்று மோதியது. 10-வது நிமிடத்தில் இருந்து கோல் மழை பொழிந்த இந்திய வீராங்கனைகள் 13-0 என்ற கணக்கில் நமிபியாவை வீழ்த்தியது. சிவாச் கனிகா, பனோ ஹினா தலா 3 கோலும், சாக்ஷி ராணா 2 கோலும் அடித்தனர். முன்னதாக ஜெர்மனி 7-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
