முழு உடல் தகுதியை எட்டிய ஹர்திக் பாண்டியா
புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்- ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் போது இடது காலில் காயம் அடைந்தார். அவர் அதன் பிறகு எந்த போட்டியிலும் ஆடவில்லை. ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மையத்தில் மேற்கொண்டு வந்தார். அவருடைய உடல் தகுதியை ஆய்வு செய்த கிரிக்கெட் வாரிய மருத்துவ கமிட்டியினர், முழு உடல் தகுதியை எட்டியதை அடுத்து டி20 போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஹர்திக் பாண்டியா சுமார் 2½ மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்புகிறார். தற்போது ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய இடங்களில் நடந்து வரும் 18-வது முஷ்டாக் அலி கோப்பைக்கான தொடரில் பரோடா அணிக்காக விளையாட இருக்கிறார். ஐதராபாத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பரோடா அணி, பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. அந்த அணி அடுத்து வரும் ஆட்டங்களில் குஜராத் (4-ந் தேதி), அரியானாவுடன் (6-ந் தேதி) மோதுகிறது. வருகிற 9-ந் தேதி தொடங்கும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு முன்பாக தனது முழு உடல் தகுதியை நிரூபிக்க இந்த ஆட்டங்களில் ஹர்திக் பாண்டியா விளையாடுகிறார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
