மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட போகிறாரா விராட் கோலி..? அவரே சொன்ன பதில்
ராஞ்சி, இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலியின் அபார சதத்தின் (135 ரன்கள்) உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன் குவித்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 49.2 ஓவரில் 332 ரன் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்த போட்டி யில் இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி ஆட்ட நாயகன் விருது வென்றார். விராட் கோலி சர்வதேச டி20 மற்றும் டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். ஒருநாள் போட்டியில் மட்டுமே ஆடி வருகிறார். இதனிடையே இந்திய டெஸ்ட் அணி சமீபகாலமாக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் அனுபவம் வாய்ந்த விராட் கோலியை டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் அழைக்க பி.சி.சி.ஐ. பரிசீலிப்பதாக ஊகங்கள் கிளம்பின. இந்நிலையில் இது தொடர்பாக நேற்றைய போட்டியின் முடிவில் ஆட்ட நாயகன் விருது வென்ற விராட் கோலியிடம், ‘நீங்கள் தொடர்ந்து ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடப் போகிறீர்களா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விராட் கோலி, “ஆம், அது எப்போதும் அப்படித்தான் இருக்கும். நான் ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடுகிறேன்” என்று கூறினார். இதன் மூலம், அவர் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்பது உறுதியாகி உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
