ரஷியா-உக்ரைன் போரை நிறுத்தும் முயற்சியில் முன்னேற்றம்: அமெரிக்கா தகவல்
வாஷிங்டன், ரஷியா–உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை கடந்துவிட்டது. போரை நிறுத்த அமெரிக்கா அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி செய்து வருகிறார். ரஷியா–உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர 28 அம்சங்களைக் கொண்ட அமைதித் திட்டத்தை டிரம்ப் பரிந்துரைத்தார். டிரம்ப் பரிந்துரைகள் ரஷ்யாவுக்கு சாதகமாகவும், உக்nரைனுக்கு பாதகமாகவும் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்திருந்தார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ, உக்ரைன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமெரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:“ரஷியா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாக இருந்தன. இது சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் விதிமுறைகள் மட்டுமல்ல; இது உக்ரைனின் நீண்டகால செழிப்புக்கான விதிமுறைகளைப் பற்றியது. இன்று நாம் அதைக் கட்டியெழுப்பினோம் என்று நினைக்கிறேன். ஆனால் இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது” என்று அவர் கூறினார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
