ஆபரேசன் சாகர்பந்து... இலங்கையில் சிக்கி தவித்த இந்திய பயணிகள் பாதுகாப்பாக மீட்பு
கொழும்பு, துபாயில் இருந்து 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பயணிகளுடன் விமானம் ஒன்று இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. இலங்கை வழியே இந்தியா வர இருந்த விமானம், இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு தரையிறங்கியது. எனினும், வங்க கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவான டிட்வா புயல் எதிரொலியாக கனமழை பெய்தது. இதனால், இலங்கையில் விமானம் மற்றும் ரெயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், இந்தியர்களை ஏற்றி வந்த விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பயணிகளும் கடந்த 5 நாட்களாக கொழும்பு விமான நிலையத்திலேயே சிக்கி தவித்தனர். அவர்களுக்கு போதிய உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. எங்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என இந்திய பயணிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மூலம் இலங்கையில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். இதனை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியும் உறுதிப்படுத்தி உள்ளது. அந்த பதிவில், ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை புன்னகையை வரவழைத்து உள்ளது. கொழும்புவில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் சிக்கியுள்ள இந்திய பயணிகள் அடங்கிய கடைசி குழுவினரும், பாரத் மாதா கி ஜெய் என முழங்கியபடி, திருவனந்தபுரம் புறப்பட்ட இந்திய விமான படையின் விமானத்தில் ஏறினர். அப்போது, இந்திய தூதர் சந்தோஷ் ஜா அவர்களை வழியனுப்பி வைத்துள்ளார் என பதிவிட்டு உள்ளது. இலங்கையில் வேறு எந்த இந்திய பயணியாவது இருக்கிறார் என்றால், அவர் அவசர உதவி எண் +94 773727832-ஐ தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இதுவரை (ஞாயிற்று கிழமை) இந்திய விமான படை 21 டன்கள் நிவாரண பொருட்கள் மற்றும் தேசிய பேரிடர் நிவாரண குழுவை சேர்ந்த 80 பேரை அனுப்பியுள்ளது.




ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
