‘திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்தது’ - எலான் மஸ்க்
வாஷிங்டன், உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அமெரிக்காவின் குடியேற்ற கொள்கை மற்றும் தொழில்முனைவு குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- “அமெரிக்காவில் குடியேறிய திறமை வாய்ந்த இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்தது. அதாவது இந்திய திறமையின் மிகப்பெரிய பயனாளியாக அமெரிக்கா இருந்துள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தில் எல்லை கட்டுப்பாடுகள் முற்றிலும் இல்லாமல் இருந்தது. எல்லையில் கட்டுப்பாடு இல்லாவிட்டால் சட்டவிரோத குடியேற்றம் அதிகரிக்கும். அதனால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். வெளிநாட்டில் இருந்து வருபவர்களால் அமெரிக்க குடிமக்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கு தெரிந்தவரை திறமைசாலிகளுக்கு எப்போதுமே பற்றாக்குறை இருந்து வருகிறது. அந்த வெற்றிடத்தை வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் நிரப்புகிறார்கள். எங்கள் நிறுவனத்தை பொறுத்தவரை நாங்கள் உலகில் உள்ள திறமைசாலிகளை கண்டறிந்து பயன்படுத்த விரும்புகிறோம். தொழில்முனைவோர் எப்போதும் கடுமையாக உழைக்க வேண்டும். தோல்விகளுக்கு தயாராக இருக்க வேண்டும். புதிதாக எதையாவது உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் ரசிகன் நான். எனவே, பெரிதாக சாதிக்க வேண்டும் என்று துடிப்பவர்களுக்கு எப்போதும் எனது மரியாதை உண்டு. சமூகத்திற்கு பயன் தரும் வகையில் எதையாவது செய்ய வேண்டும் என்ற தேடல் இருப்பது சிறந்தது. நீங்கள் மகிழ்ச்சியை நேரடியாக தேட முடியாது. உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை நீங்கள் தேடிச் செல்லும்போது மகிழ்ச்சி தானாக வரும். அதே போல், நேரடியாக பணத்தை தேடிச் செல்வதை விட, சமூக பயன்பாட்டிற்கான பொருட்கள் அல்லது சேவைகளை உருவாக்கும்போது அதில் வருமானமும் தானாக வரும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
