சாரா மறைவுக்கு ஜோ பைடன் நிர்வாகமே பொறுப்பு; அமெரிக்க அரசு குற்றச்சாட்டு
வாஷிங்டன் டி.சி., அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் சாரா பெக்ஸ்டிராம் (வயது 20) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மற்றொருவரான ஆண்ட்ரூ உல்ப் (வயது 24) தீவிர காயத்துடன் உயிருக்கு போராடி வருகிறார். இந்த தாக்குதலை நடத்தியவர் ரகுமானுல்லா லக்கன்வால் (வயது 29) என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் டிரம்ப் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. டிரம்ப் அரசின் உள்நாட்டு பாதுகாப்புக்கான உயரதிகாரியான கிறிஸ்டி நோயம், வெள்ளை மாளிகையில் நடந்த தாக்குதலில், சாரா கொல்லப்பட்டதற்கு ஜோ பைடன் அரசே பொறுப்பு என குற்றச்சாட்டாக கூறியுள்ளார். துப்பாக்கி சூடும், அதில் சாரா பலியானதற்கும் முழு பொறுப்பும் பைடனும், அவருடைய நிர்வாகமுமே காரணம். பைடன் அரசிலேயே இதுபோன்ற தனி நபர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவது தொடங்கியது என கூறியுள்ளார். ரகுமானுல்லா, ஆப்கானிஸ்தானில் இருந்து 2021-ம் ஆண்டு அமெரிக்க படைகள் வாபஸ் பெற்ற பின்னர், ஜோ பைடன் அரசின்போது, அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்றவர். ஆபரேசன் அல்லைஸ் வெல்கம் என்ற பெயரில் நட்பு நாடுகளை சேர்ந்தவர்களை வரவேற்கிறோம் என பைடன் அரசு கூறியது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
