இலங்கையில் 193 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை! 228 பேர் மாயம் என தகவல் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. டிட்வா புயலின் தாக்கத்தினால் இலங்கையில் மோசமான வானிலை நிலவுகிறது. வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் கனமழை காரணமாக பல பகுதிகள் தொடர்ந்து சவால்களை சந்தித்து வருகின்றன. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,094 பாதுகாப்பான முகாம்களில் 41,005 குடும்பங்களைச் சேர்ந்த 147,931 பேர் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளதாக DMC தெரிவித்துள்ளது. டிட்வா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக இருந்தது. 191 பேர் மாயமானதாக கூறப்பட்டது. இந்த நிலையில், நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் உறுதிப்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக பதுளை மாவட்டத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பல மாவட்டங்களில் தேடுதல் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், குறைந்தது 228 பேர் காணாமல் போயுள்ளதாக DMC உறுதிப்படுத்தியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
