வெள்ளத்தினால் இலங்கை கிரிக்கெட் மைதானத்தில் தஞ்சமடைந்த மக்கள்? உண்மை இதுதான் - லங்காசிறி நியூஸ்
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பொதுமக்கள் தஞ்சமடைந்ததாக பகிரப்படும் புகைப்படங்கள் குறித்த உண்மை தெரிய வந்துள்ளது. டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தினால் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 153 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 7.74 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், லட்சக்கணக்கான மக்கள் 798 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில் வெள்ளத்தினால் வீடுகளை இழந்த மக்கள் கிரிக்கெட் திடலில் தஞ்சமடைந்துள்ளதாக பகிரப்படும் புகைப்படங்கள் பொய்யானவை என தெரிய வந்துள்ளது. அதாவது, தலைநகர் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் திடலில் கூடாரம் அமைத்து, மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதைப் போன்று பகிரப்படும் படங்கள் செயற்கை நுண்ணறிவால் (Artificial Intelligence) உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிய வந்துள்ளது. இர்ஷாத் இம்தியாஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இவர் இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் தொடர்பான செய்திகளை வழங்கி வருபவர் ஆவார். இதற்கிடையில், 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
