நீர்கொழும்பில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்: கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய பல இடங்கள் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக நீர்கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.இலங்கையில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.தெபா எல மற்றும் சிறு ஓடைகள் தண்ணீர் பெருக்கெடுத்தன் விளைவாக பெரியமுல்லை, கோமஸ்வத்த, றப்பர்வத்த, செல்லகந்த, தெனியாயவத்த, தழுபொத்த, மைமன்கொடல்ல ஆகிய பகுதிகளில வெள்ளத்தில் மூழ்கி வீடுகளுக்கு நீர் புகுந்துள்ளன. வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக அல் ஹிலால் மத்திய கல்லூரி தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தன்னார்வலர்கள் படகுகளை பயன்படுத்தி பத்திரமாக மீட்டு வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
