மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..?

  தினத்தந்தி
மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..?

சென்னை, தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான சூழலே கடந்த ஒரு வாரமாக நீடிக்கிறது. கடந்த 21-ந் தேதி விலை குறைந்திருந்த நிலையில், 22-ந் தேதி விலை அதிகரித்து, நேற்று முன்தினம் குறைந்து, நேற்று மீண்டும் உயர்ந்து காணப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 520-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 720-க்கும், ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் மீண்டும் ரூ.93 ஆயிரத்தை தாண்டி இருந்தது. வெள்ளி விலையும் நேற்று அதிகரித்து இருந்தது. கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.174-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,800-க்கும், ஒரு சவரன் ரூ.94,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.176-க்கும். ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 26.11.2025 ஒரு சவரன் ரூ.94,400 (இன்று) 25.11.2025 ஒரு சவரன் ரூ.93,760 (நேற்று) 24.11.2025 ஒரு சவரன் ரூ.92,160 23.11.2025 ஒரு சவரன் ரூ.93,040 22.11.2025 ஒரு சவரன் ரூ.93,040 21.11.2025 ஒரு சவரன் ரூ.91,680

மூலக்கதை