கனடா, சுவிஸ் நாட்டில் வேலைவாய்ப்பு: இலங்கையில் பணமோசடியில் ஈடுபட்ட இருவர் கைது - லங்காசிறி நியூஸ்
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பொய் வாக்குறுதிகளை வழங்கி பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரின் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டனர்.கனடா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி பல மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரும் வரகாபொல மற்றும் களுத்துறை நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபர்களான பெண் உட்பட இருவர் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணத்தை இழந்தவர்கள் வழங்க புகார்களுக்கு பிறகு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு பிரிவினரால் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள், கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் தென்னிலங்கை சேர்ந்த 04 பேரிடம் தலா 13 மில்லியன் ரூபாய் வீதம் 52 மில்லியன் ரூபாய் பணத்தை சந்தேக நபர் ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளார். பணம் பெற்ற பிறகும், அவர்கள் வேலைவாய்ப்பு போன்ற முக்கிய வாக்குறுதி நிறைவேற்ற வில்லை.தைப்போல சுவிட்சர்லாந்தில் வேலை பெற்றுத் தருவதாக 13 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண்ணொருவரும் களுத்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பு பிரிவில் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
