திடீர் உயர்வில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

  தினத்தந்தி
திடீர் உயர்வில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னை, தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 18-ந்தேதி குறைந்து, 19-ந்தேதி உயர்ந்த நிலையில், நேற்று முன்தினம் விலை சரிந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 460-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.92 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. வெள்ளி விலையும் மளமளவென சரிந்து வந்தது. அதன்படி, நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்தது. நேற்றும் கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.169-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை இந்நிலையில் இன்று தங்கம் விலை திடீர் உயர்வை சந்தித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,630-க்கும், ஒரு சவரன் ரூ.93,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ. 3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.172-க்கும். ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 22.11.2025 ஒரு சவரன் ரூ.93,040 (இன்று) 21.11.2025 ஒரு சவரன் ரூ.91,680 (நேற்று) 20.11.2025 ஒரு சவரன் ரூ.92,000 19.11.2025 ஒரு சவரன் ரூ.92,800 18.11.2025 ஒரு சவரன் ரூ.91,200 17.11.2025 ஒரு சவரன் ரூ.92,320

மூலக்கதை