மீண்டும் ரூ.92 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
சென்னை, தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும், பின்னர் இறங்குவதுமான சூழலே நீடிக்கிறது. அப்படியாக கடந்த 14-ந்தேதியில் இருந்து விலை குறைந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் விலை அதிகரித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் நேற்று குறைந்திருந்தது. கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.173-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,460-க்கும், ஒரு சவரன் ரூ.91,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ. 4 குறைந்து ஒரு கிராம் ரூ.169-க்கும். ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 21.11.2025 ஒரு சவரன் ரூ.91,680 (இன்று) 20.11.2025 ஒரு சவரன் ரூ.92,000 (நேற்று) 19.11.2025 ஒரு சவரன் ரூ.92,800 18.11.2025 ஒரு சவரன் ரூ.91,200 17.11.2025 ஒரு சவரன் ரூ.92,320 16.11.2025 ஒரு சவரன் ரூ.92,400




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
