சரிவை சந்தித்த தங்கம், வெள்ளி விலை..இன்றைய நிலவரம் என்ன ?

  தினத்தந்தி
சரிவை சந்தித்த தங்கம், வெள்ளி விலை..இன்றைய நிலவரம் என்ன ?

சென்னை, தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி ஒரு கிராம் ரூ.12,200-க்கும், ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதான் இதுவரை இல்லாத தங்கம் விலை உச்சமாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அதாவது, கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன்பிறகு தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களுடன் இருந்து வருகிறது. . இந்த நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 2-வது முறையாக அதிகரித்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.800 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.92,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் மாலை அதிகரித்தது. அதன்படி கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.176-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது . கிராமுக்கு ரூ.100-ம் சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11,500-க்கும் சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலைகிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.173-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை