பிரான்ஸில் இருந்து யாழ் வந்த இளைஞர் வெட்டிக் கொலை: சிசிடிவி-யில் சிக்கிய ஆதாரம் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
பிரான்ஸில் இருந்து யாழ் வந்த இளைஞர் வெட்டிக் கொலை: சிசிடிவியில் சிக்கிய ஆதாரம்  லங்காசிறி நியூஸ்

பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த 29 வயது இளம் குடும்பஸ்தர் ராஜகுலேந்திரன் பிரிந்தன், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வடமராட்சி கரணவாய் கூடாவளவு பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன், பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொண்டு மீண்டும் பிரான்சுக்கு செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இன்னும் தெரிய வராத நிலையில், கொலை நடந்த சம்பவ இடத்தில் இருந்து சந்தேக நபர்கள் இரண்டு பேர் செல்லும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில்  பதிவாகியுள்ளது. நேற்றிரவு 12:00 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  ராஜகுலேந்திரன் பிரிந்தனை பின் தொடர்ந்து வந்த கொலை குற்றவாளிகள் அவரை கூர்மையான ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்ட ராஜகுலேந்திரன் பிரிந்தனின் உடல் தற்போது ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை கைது செய்ய நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை