யாழ்ப்பாணத்தில் தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட இளைஞர்: விசாரணையில் தெரியவந்த உண்மை - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
யாழ்ப்பாணத்தில் தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட இளைஞர்: விசாரணையில் தெரியவந்த உண்மை  லங்காசிறி நியூஸ்

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டுள்ளார். 18ம் திகதி இந்த சம்பவத்தில் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஆ.கஜிந்தன் (வயது 28) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.இளைஞர் உயிரிழப்பிற்கான காரணத்தை பொலிஸார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக உயிரிழந்த இளைஞன் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள தந்தையின் வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், அவர் இன்று காலை அந்த வர்த்தக ஸ்தாபனத்தின் களஞ்சியசாலையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். கடன்சுமை காரணமாக குறித்த இளைஞன் உயிர் மாய்த்ததாக மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மூலக்கதை