ஆந்திராவில் ஏ.ஐ. தரவு மையம் அமைக்கும் ரிலையன்ஸ்
அமராவதி,உலக அளவில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) சேவைகளை எதிர்கொள்ள புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்க பல்வேறு நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்து வருகின்றன. இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 100 கோடியாக இருக்கிறது. இதை பயன்படுத்திக்கொள்ள சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. அந்தவகையில் கூகுள் நிறுவனம் ஆந்திராவில் 15 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1.25 லட்சம் கோடி) மதிப்பில் ஏ.ஐ. தரவு மையத்தை நிறுவுகிறது. இதைப்போல மைக்ரோசாப்ட், அமேசான் நிறுவனங்களும் இந்தியாவில் ஏ.ஐ. தரவு மையத்துக்கு முதலீடு செய்துள்ளன. இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனமும் ஆந்திராவில் 1 ஜிகாவாட் ஏ.ஐ. தரவு மையம் அமைக்கிறது. இந்த தகவலை ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். எனினும் இதற்கான நிதி விவரங்களை அவர் வெளியிடவில்லை.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
