இலங்கையில் இரண்டு வாரத்தில் 16,738 பேர் கைது: 1000 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றல் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் இரண்டு வாரத்தில் மட்டும் 16000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருப்பதாக பொலிஸார் ஊடகப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.இலங்கை முழுவதும் அக்டோபர் 30ம் திகதி முதல் நவம்பர் 13ம் திகதி வரை நடத்தப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இதுவரை 16 ஆயிரத்து 738 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அந்நாட்டு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த பிரம்மாண்ட கைது நடவடிக்கை நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 16 ஆயிரத்து 915 சோதனைகளுக்கு பிறகு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சோதனைகளின் போது 110 கிலோ 556 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 600 கிலோ 947 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 10 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 458 கிலோ 216 கிராம் கஞ்சா போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 லட்சத்து 15 ஆயிரத்து 632 கஞ்சா செடிகளும், 4 கிலோ 847 கிராம் குஷ் போதைப் பொருளும், 25 கிலோ 483 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 41 ஆயிரத்து 874 மாத்திரைகளும் , 36 கிலோ 176 கிராம் மாவா உள்ளிட்ட போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களில் 313 பேரை மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
