சற்று குறைந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

  தினத்தந்தி
சற்று குறைந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னை, தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதான் இதுவரை இல்லாத தங்கம் விலை உச்சமாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அதாவது, கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.அதனையடுத்து தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் நிலையும் நீடித்து வந்ததை பார்க்க முடிந்தது. இப்படியாக விலை இருந்த நிலையில், கடந்த 10-ந்தேதியில் இருந்து ஏறுமுக கணக்கை மீண்டும் தங்கம் தொடங்கியது. அன்றைய தினம் ஒரு சவரன் ரூ.1,440-க்கு உயர்ந்திருந்தது. அதற்கு மறுநாள் (11-ந்தேதி) ஒரு சவரன் ரூ.1,760-ம் அதிகரித்து, நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது.இந்த நிலையில் நேற்று அதிரடியாக உயர்ந்து அனைவருக்கும் ‘ஷாக்' கொடுத்துவிட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலையை பொறுத்தவரையில், கடந்த 4 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.600-ம், சவரனுக்கு ரூ.4,800-ம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை தாண்டியது. இதற்கு முன்பு கடந்த மாதம் 14-ந் தேதி ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்து இருந்தது.தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் குறைந்து வந்த நிலையில், கடந்த 10-ந் தேதியில் இருந்து விலை அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி, நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10,000-ம் எகிறி, ஒரு கிராம் ரூ.183-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 840-க்கும், சவரனுக்கு ரூ. 480 குறைந்து, ஒரு சவரன் ரூ.94ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 14.11.2025 ஒரு சவரன் ரூ.94,720 (இன்று) 13.11.2025 ஒரு சவரன் ரூ.95,200 (நேற்று) 12.11.2025 ஒரு சவரன் ரூ.92,800 11.11.2025 ஒரு சவரன் ரூ.93,600 10.11.2025 ஒரு சவரன் ரூ.91,840 09.11.2025 ஒரு சவரன் ரூ.90,400 08.11.2025 ஒரு சவரன் ரூ.90,400

மூலக்கதை