இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த நபர்: கைது செய்த மரைன் பொலிஸார் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையின் மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு இலங்கையர் ஒருவர் சட்ட விரோதமான முறையில் வந்ததை அடுத்து இன்று (13.11.2025) வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். மரைன் பொலிஸார் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போது, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் நின்று கொண்டிருப்பதை பார்த்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையிலிருந்து தப்பி தனுஷ்கோடி-க்கு அந்த நபர் வந்ததை பொலிஸார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். பின்னர் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் இலங்கை மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் தமிழ்நாட்டிற்கு வந்ததன் நோக்கத்தை மரைன் பொலிஸார் மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்தில் அவரை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
